Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 5, 2016

மாட்டிறைச்சி என தவறாக நினைத்து லாரிக்கு தீ வைப்பு!


கோழி தீவணத்தை ஏற்றிவந்த லாரியை இடைமறித்து அதன் ஓட்டுனரை சரமாரியாக தாக்கியதோடு அந்த டிரக் லாரியும் தீவைத்து கொழுத்தப்பட்ட சம்பவம் உத்திரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் போபாலைச்சேர்ந்த‌ ராஜேஷ் ஜெயின் என்பவர் கோழிகளுக்கான பதப்படுத்தப்பாட உணவை தன்னுடைய டிரக் லாரியில் ஏற்றி கொண்டு வந்தார். வழியில் டிரக் பழுதடைந்து போகவே மெக்கானிக்கை அழைத்துவிட்டு அவர் வருவதற்காக காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.  கோழிக்கான உணவு பச்சையாக இருந்ததால் அதிலிருந்து வீசிய வாடை அருகிலிருந்த பகுதிகளில் பரவியது.

போபாலில் இருந்து மாட்டிறைச்சியைத்தான் டிரக்கில் கடத்திச் செல்கிறார்களோ என்ற தவறாக எண்ணிவிட, அங்கு வந்த சில நபர்கள் வண்டியில் இருந்த ஜெயினை கீழே தள்ளி அடித்து துவம்சம் செய்தனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் டிரக் லாரியின் மீது மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட பல குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic