Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 15, 2016

இஸ்ரேலுக்கு அமெரிக்கா நிதி உதவி..!


இஸ்ரேல் நாட்டுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு 38 பில்லியன் டாலர்களை ராணுவ நிதியுதவியாக வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரான் நாட்டுடன் கடந்த பிப்ரவரி மாதம் அணு ஒப்பந்தம் செய்து கொண்ட அமெரிக்காவின் நடவடிக்கை அதன் நட்புநாடும், ஈரானின் பகைநாடுமான இஸ்ரேலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் - அமெரிக்கா இடையில் ஏற்படுத்தப்பட்ட முந்தைய ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 3.1 பில்லியன் டாலர்கள் வீதம் 10 கடந்த ஆண்டுகளாக 31 பில்லியன் டாலர்களை அந்நாட்டின் ராணுவத்தை மேம்படுத்த நிதியுதவியாக அளித்து வந்தது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் விரைவில் முடிவடைவதால் அடுத்த 10 ஆண்டுகளுக்கான ராணுவ நிதியுதவி தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டு அதிகாரிகள் இடையே சமீபகாலமாக பலசுற்று பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அமெரிக்காவிடம் பெறப்படும் நிதியில் இருந்து அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை தொடர்பாக இந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்ய இஸ்ரேல் தயக்கம்காட்டி வந்தது.

மேலும், விரைவில் பதவியை விட்டு இறங்கவுள்ள ஒபாமாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாமல், அவருக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்பவருடன் புதிய ஒப்பந்தம் செய்து கொண்டால் நிதியுதவி தொகையும் அதிகமாக கிடைக்கும். நிபந்தனைகளையும் தளர்த்திக் கொள்ளலாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கருதி வந்தார்.ஆனால், தனது பதவிக் காலத்துக்குள் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, தனது நட்புநாடுகள் வளையத்துக்குள் இஸ்ரேலை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் ஒபாமா மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். எனவே, இந்த ஒப்பந்தத்தை விரைவுப்படுத்துமாறு அவர் வெளியுறவுத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

இதன்விளைவாக, இறுதிசுற்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து, இஸ்ரேல் நாட்டின் ராணுவத்துக்கு ஆண்டுதோறும் 3.8 பில்லியன் டாலர்கள் வீதம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு 38 பில்லியன் டாலர்களை நிதியுதவியாக வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை உள்நாட்டில் செலவிடவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வாஷிங்டன் நகரில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை ஆலோசகர் சூசன் ரைஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேகப் நாகெல் ஆகியோர் நாளை இந்த புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவார்கள் என அதிபரின் வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை எந்த நாட்டு ராணுவத்துக்கும் அமெரிக்கா அளித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic