பசுகாவலர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலன் ஏற்படாமல் உயிரிழந்த சம்பவம் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபத்தைச்சேர்ந்தவர் முகமது அய்யூப். இவர் தனது நண்பர் சாமிர் சேக்குடன் சில நாட்களுக்கு முன்பு இரண்டு கன்று குட்டிகளை தனது காரில் ஏற்றிச்சென்றிருக்கிறார். இதனை கேள்விப்பட்ட பசுகாவலர்கள் அவர்களை துரத்திச்சென்றுள்ளனர். உடனே அவர்கள் இருவரும் காவல்துறையினரை தொடர்பு கொண்டு தங்களை காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளனர்.
ஆனால் காவல்துறை தரப்பில் இதனை நம்ப மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எஸ்.ஜி நெடுஞ்சாலையில் அவர்கள் சென்ற காரின் மீது பலமாக மோதிய பசு காவலர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் காரில் ஏற்றிச்சென்ற ஒரு கன்று இறந்து போயுள்ளது. இதே போல் சிகிச்சை பலனின்றி முகமது அய்யூபும் உயிரிழந்துள்ளார். இதனை பசு காவலர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். வி.ஹெச்.பி அமைப்பின் அப்பகுதி தலைவர் ராஜுபாய் படேல் கூறும்போது இது பசு காவலர்கள் மீது போலியாக குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

செய்தி: டெக்கன் குரோனிக்கல்

No comments:
Write comments