மத்திய அரசு காவேரி மேலான்மை வாரியத்தை அமைக்கக்கோரியும், கர்நாடகத்தில் உள்ள தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் இளங்கோ வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறியுள்ளதாவது,
காவேரி பிரச்சனையில் 1891-1924 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒபந்தங்களின் விதிமுறைகள் கர்நாடகத்தால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. ஆகவே நீதி கேட்டு, நீர் கேட்டு, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. 1990ல் காவேரி நடுவர் மன்றம் அமைக்கபப்ட்டது. இம்மன்றம் 1991ல் இடைகால தீர்ப்பையும், 16 ஆண்டுகள் கழித்து 2007ல் இறுதி தீர்ப்பையும் வழங்கியது. 2013ல் இத்தீர்ப்பு அரிசிதழில் வெளியிடப்பட்டது.
காவேரிப்படுகையில் கிடைக்கும் 740 டி.எம்.சி தண்ணீரில் 419 டி.எம்.சி நீர் தமிழகத்திற்கு உரித்தானது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் குறுவை, சம்பா பயிரிடும் காலகட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய ஒவ்வொரு மாதத்திலும் எவ்வளவு தண்ணீர் தர வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளது. ஆனால் இத்தீர்ப்பை மதிக்காமல். தன்னிச்சையாக செயல்படும் கர்நாடகம், தனது மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பினால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு தண்ணீர் திறந்துவிடுங்கள் என்றால் பேருந்துகளை எரிப்பது, தமிழர்களை தாக்குவது போன்ற அராஜகச் செயல்களில் சில கன்னட அமைப்புகள் ஈடுபடுகிறது. இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டிய கர்நாடக அரசு, கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் தமிழர்கைன் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உள்ளது. தனது பொறுப்பை உணர்ந்து விரைந்து செயல்பட்டு கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி, வருங்காலங்களில் இது போன்ற வன்முறைச்ச் சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் அரசை வலியுறுத்துகிறது.
காவேரி பிரச்சனை குறித்த போராட்டகளத்தி அனைத்துக்கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கோருவது காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதே. 2007ல் காவேர் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எழுதிய நீதிபதிகள் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் இத்தீர்ப்பு வெறும் துண்டு காகிதமே என்று.
வாரியத்தை அமைக்க வேண்டியது யார்? மத்திய அரசு ஏன் அமைக்கவில்லை? மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருப்பதால் இதனை அமைக்க முடியாது என்று சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து கொண்டு கர்நாடகாவில் தன்னுடைய வாக்கு வங்கிக்கு சேதாரம் வராமல் பார்த்துக்கொள்கிறது பா.ஜ.க.
2007ல் வெளியான இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல், அப்போதைய காங்கிரஸ் அரசு காலம் கடத்தியது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு பிப்ரவரி 20, 2013க்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தீர்ப்பளித்தபின் அவசரஅவசரமாக பிப்ரவரி 19, 2013 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. தீர்ப்பு அரசிதழி ஏறுவதற்கு 6 ஆண்டுகள் தாமதமானதற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு காரணமாகியது.
இப்போது பா.ஜ.க அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் கடத்துகிறது. 2013ல் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வழக்குகள் உள்ளது என்பதை காரணம் காட்டுகிறது. உண்மையிலேயே பா.ஜ.க அரசிற்கு கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநில மக்களின் மீது அக்கறை இருந்தால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகளை விரைந்து முடிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லை, இப்போது நாங்கள் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கிறோம், மேல்முறையீட்டு வழக்கில் ஏதேனும் திருத்தங்கள், மாற்றங்கள் இருந்தால் அதை செயல்படுத்த தயாராக இருக்கிறோம் என்று உச்ச நீதிமன்றத்திற்கு உறுதிமொழி கொடுத்துவிட்டு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திஅய் அரசிற்குதான் மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டிய அவசரம், அவசியம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு உள்ளது என்று மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழிப்பது தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் பச்சைத்துரோகம்.
ஆகவே மத்திய அரசு உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். கர்நாடகத்தில் உள்ள தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Write comments