Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 19, 2016

ராம்குமார் தற்கொலை - நீதி விசாரணை வேண்டும்!


ராம்குமார் தற்கொலை தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கபப்ட்ட ராம்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வந்தது. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்ப்ட்டபோதே தற்கொலைக்கு முயற்சித்ததாக செய்தி வந்தது. ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் அடைத்து வைக்கப்படிருக்கிற போது எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்? சிறை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது? சிறை நிர்வாகம் ராம்குமாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

எனவே ராம்குமார் மரணம் தற்கொலையா இல்லையா என்பதை விசாரிக்க, தற்போது பொறுப்பில் உள்ள உயர் நீதிமன்ற நீத்பதியைக்கொண்டு உயர்மட்ட நீதி விசாரணை நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மா நில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic