உத்திரபிரதேச மாநிலத்தில் வரதட்சணை கேட்டு மனைவியின் மூக்கை வெட்டிய கணவரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திர பிரதேச மாநிலம் ஹாக்ஜாகன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ரத்தோர். இவர் சில வருடங்களுக்கு முன்னர் கமலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், திருமணமான தினத்திலிருந்தே சஞ்சீவ் வரதட்சணை கேட்டு கமலேஷிடம் தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி சஞ்சீவ் தனது மனைவி கமலேஷிடம் விட்டிலிருந்து ரூ.50,000 வாங்கி கொண்டு வருமாறு கூறியுள்ளார். ஆனால் கமலேஷ் தன் தாயார் குடும்பம் மிகவும் கஷ்ட நிலையில் உள்ளது பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவ் அருகிலிருந்த கத்தியை எடுத்து தனது தாயாரின் உதவியுடன் கமலேஷின் மூக்கினை வெட்டிவிட்டு தாயாருடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
கமலேஷின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் வெட்டப்பட்ட மூக்குடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர், ஆனால் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூக்கை ஒட்ட வைக்க முடியாது என்று கூறிவிட்ட நிலையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் கமலேஷின் 6 வயது மகள் தான் நேரில் பார்த்ததாக உண்மையை கூறியுள்ளார். இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த பொலிசார் தலைமறைவாகியுள்ள சஞ்சீவ் மற்றும் அவரது தாயாரையும் தேடி வருகின்றனர்.

No comments:
Write comments