Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 24, 2016

கொல்லப்பட்டது சுவாதியை கொன்ற மணி இல்லை, தமிழச்சி குழப்பம்!

சுவாதியைக் கொன்றவர்களில் ஒருவரான மணியும் படுகொலை செய்யப்பட்டு விட்டதாக பிரான்ஸ் தமிழச்சி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். ஆனால் அது தவறான பதிவு என விளக்கம் அளித்துள்ளார்.

சுவாதி கொலையாளிகளில் ஒருவரான மணி என்பவர் படுகொலை செய்யப்பட்டு விட்டதாக பிரான்ஸ் தமிழச்சி கூறியிருந்தார். ஆனால் அது தவறான தகவல் என தற்போது அவர் மறுத்துள்ளார். சுவாதி படுகொலை வழக்கு விசாரணையில் இருந்த ராம்குமார் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட அன்று சுவாதியை கொன்றவர்களில் ஒருவரான 'மணி' என்பவர் குறித்த தகவல்கள் எழுதி இருந்தேன். அவர் கூடிய விரைவில் கொல்லப்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அதேப்போல் இன்று காலை அவர் கொல்லப்பட்டிருக்கிறார். உடல் அடையாளம் தெரியவில்லை என்கிறார்கள். ஆனால் தலை மொட்டையாக இருந்தால் நிச்சயம் மணி தான். இத்தகவல் நான் எழுதிய உடன் ஒரு பத்திரிக்கையார் அச்செய்தி உண்மைதானா என்று புலன் விசாரணை செய்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

தன் மகனை குறித்து அவதூறு பதிவு போட்டதற்காக தமிழச்சி மீது போலிசில் புகார் அளிக்கப் போகிறேன் என்று பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் இன்று மணி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

2-வதாக கொல்ல முயற்சிக்க கூடியவர்களில் ராம்குமார் குடும்பத்தில் உள்ள ராம்குமார் அப்பா அம்மா இரு தங்கைகளில் யாராவது ஒருவர் பலியாக்கப்படலாம். எனவே அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லக் கூடாது.

ராம்குமார் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்பது சொந்த செலவில் நாமே சூனியம் வைத்துக் கொள்வது போன்றது. எனவே இயக்கங்கள் ராம்குமார் குடும்பத்திரை பாதுகாக்க பொறுப்பு ஏற்க வேண்டும். திலீபன் போன்ற ஒரு இளைஞன் தான் அந்த குடும்பத்தினரை தற்போது பாதுகாக்க முடியும். ஆனால் திலீபன் உயிருக்கும் ஆபத்து. அது உடனடியாக நடக்காது. சில மாதங்கள் ஆகலாம்.

சுவாதி படுகொலை விவாதம் இப்போது ராம்குமார் படுகொலை விவாதமாக மாற்றப்பட்டுள்ளது. ராம்குமார் படுகொலையில் மர்மம் இருப்பதால் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிணஆய்வு நடைப்பெறக் கூடாது என்று போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

இன்னமும் ராம்குமாரின் பெற்றோர் தன் மகனின் உடலைக்கூட பார்க்க முடியாத ஜனநாயக நாட்டிலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? என்று பொது விமர்சனத்தை திசை மாற்ற மணி படுகொலை உதவக்கூடும்.

நம் நோக்கம் இதுவல்ல; சுவாதியை கொன்றது யார்? ராம்குமாரை கொன்றது யார்? மணியை கொன்றது யார்? இனி யார் யாரை கொல்லப் போகிறார்கள்? இதற்கு அடிப்படியான அரசியல் என்ன? என்ற கேள்வி ஒவ்வொரு மக்களுக்கும் வரவேண்டும்.

திலீப்பனைப் போல் ரோசியைப் போல் நீங்கள் இல்லாவிட்டாலும் ராம்குமார் குடும்பத்தினரைக் காப்பாற்ற சகமனிதனுக்காக உங்கள் கண்டனக் குரல்களையாவது வெளிப்படுத்துங்கள். என்று அவர் தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic