Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 18, 2016

காவல்துறையினரே ராம்குமாரை கொலை செய்தனர் - தமிழச்சி


சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரை பொலிஸ் தான் கொன்றது என்று பிரான்ஸ் தமிழச்சி பேஸ்புக்கில் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஜாமின் மனு விசாரணையில் அவர் விடுதலை செய்யப்பட உள்ள தகவல் பொலிசாருக்கு கிடைத்ததாகவும், இதனால் கழுத்தறுத்த விவகாரம் அம்பலமாகிவிடும் என்பதால் அவர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

புழல்சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பிரான்ஸ் தமிழச்சி 'சிறையில் ராம்குமாரை காவல்துறை கொலை செய்துள்ளது' என்ற தலைப்பில் பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில்,

"சுவாதி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் இன்று 1 மணி நேரத்திற்கு முன்பு சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது காவல்துறை நடத்திய திட்டமிட்ட படுகொலை. நாளை ஜாமீன் மனு விசாரணையில் நிச்சயம் விடுதலை செய்யப்படுவான் என்ற தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததும் இல்லாமல் பெரியார் இயக்க தொண்டர் படையினர் 150 பேர்களுக்கு மேல் தயாராக ராம்குமாரை பாதுகாக்க போகிறார்கள் என்ற தகவல்களை முன்கூட்டியே கிடைத்ததால் அதன் ஆபத்தை உணர்ந்து கொண்டு காவல்துறை ராம்குமாரை கொன்றுவிட்டது.

ராம்குமார் வெளியே வந்தால் காவல்துறையின ர்தான் தன் கழுத்தை அறுத்தது என்கிற உண்மையை அறிவித்து விடுவான் என்ற பதற்றமே காவல்துறை சாகடிக்க காரணமாகவும் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic