சிறையில் இருந்தால் என்னை கொன்றுவிடுவார்கள் என்னை எப்படியாவது ஜாமீனில் வெளியேன் கொண்டு வந்துவிடுங்கள் என்று ராம்குமார் தன்னிடம் தெரிவித்ததாக வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கபப்ட்ட ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இதனை தொடர்ந்து அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு ஏராளமானோர் கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராம்குமாரின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ராம்குமாரை அநியாயமாக கொலை செய்துவிட்டனர். இதற்கு காவல்துறையினர், நீத்பதி அனைவருமே இதற்கு காரணம். நீதி வேண்டி உச்ச நீதிமன்றம் வரை சென்று ராம்குமாரை கொன்றவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன். எங்கள் அப்பா (அம்பேத்கர்) வகுத்து கொடுத்த சட்டத்தால் எங்களையே பாதுகாக்க முடியவில்லை என்று சொன்னால் நாங்கள் எங்கே போவோம்? ராம்குமாரை நேற்று தான் சிறைச்சாலையில் சந்தித்தேன். இன்னும் சில நாட்களில் பெயில் கிடைத்துவிடும் என்று சொல்லியிருந்தேன். நான் இங்கே இருந்தால் என்னை கொன்று விடுவார்கள் எப்படியாவது என்னை ஜாமீனில் வெளியே கொண்டு வந்துவிடுங்கள் என ராம்குமார் என்னிடம் தெரிவித்தார். எனது புள்ளையை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என ராம்குமாரின் பெற்றோர் என்னிடம் வேண்டினர். ராம்குமாரை எனது புள்ளையாகத்தான் பார்த்தேன். இப்போது அவனது பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறேன் என எனக்கே தெரியவில்லை" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கடைசி வரை சுவாதி கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ராம்குமார் மறுத்துவந்திருக்கிறார். சுவாதி கொலையை தொடர்ந்து ராம்குமாரின் தற்கொலையிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

No comments:
Write comments