சுவிட்சர்லாந்து நாட்டில் பெண் ஆசிரியருடன் கை குலுக்க மறுக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறபித்துள்ளது.
சூரிச் மாகாணத்தில் உள்ள தெர்வில் பள்ளியில் படித்து வந்த இஸ்லாமிய மாணவர்கள் இருவரின் செயல்கள் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மே மாதம் ஆசிரியை ஒருவருடன் கை குலுக்க இந்த இரண்டு மாணவர்கள் மறுத்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பூதகரமாய் வெடித்தது.
உறவினர் அல்லாத ஒருவருடன் கை குலுக்குவது என்பது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால் கை குழுக்குவதர்கு மறுத்துவிட்டதாக அச்சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், சகோதர்களில் ஒருவர் பள்ளியை விட்டு நின்றுள்ளார்.
இதனை தொடர்ந்து இஸ்லாமிய சகோதர்களின் பெற்றோர்களுக்கு நகர கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியருடன் இஸ்லாமிய மாணவர்கள் கை குலுக்க மறுப்பது குற்றமாகும்.
இதுபோன்ற செயல்களில் இஸ்லாமிய மாணவர்கள் ஈடுப்பட்டால், அவர்களுக்கு 5,000 பிராங்க் (4 லட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டது.
இது தொடர்பாக கல்வி துறை அதிகாரியான மோனிகா கெஸ்வின் என்பவர் பேசிய போது, ‘ஆசிரியருடன் கை குலுக்குவது என்பது நாட்டின் கலாச்சாரத்தோட ஒன்றிய ஒரு பண்பாடாகும். இதனை பின்பற்ற தவறுவது என்பது நாட்டின் இறையான்மையை இழிவுபடுத்துவதற்கு சமமாகும்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
எனினும், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூரிச் மாகாணத்தில் உள்ள தெர்வில் பள்ளியில் படித்து வந்த இஸ்லாமிய மாணவர்கள் இருவரின் செயல்கள் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மே மாதம் ஆசிரியை ஒருவருடன் கை குலுக்க இந்த இரண்டு மாணவர்கள் மறுத்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பூதகரமாய் வெடித்தது.
உறவினர் அல்லாத ஒருவருடன் கை குலுக்குவது என்பது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால் கை குழுக்குவதர்கு மறுத்துவிட்டதாக அச்சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், சகோதர்களில் ஒருவர் பள்ளியை விட்டு நின்றுள்ளார்.
இதனை தொடர்ந்து இஸ்லாமிய சகோதர்களின் பெற்றோர்களுக்கு நகர கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியருடன் இஸ்லாமிய மாணவர்கள் கை குலுக்க மறுப்பது குற்றமாகும்.
இது தொடர்பாக கல்வி துறை அதிகாரியான மோனிகா கெஸ்வின் என்பவர் பேசிய போது, ‘ஆசிரியருடன் கை குலுக்குவது என்பது நாட்டின் கலாச்சாரத்தோட ஒன்றிய ஒரு பண்பாடாகும். இதனை பின்பற்ற தவறுவது என்பது நாட்டின் இறையான்மையை இழிவுபடுத்துவதற்கு சமமாகும்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
எனினும், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Write comments