முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று பணியினை தொடர வாழ்த்துக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு உடல் நிலை சரியாகி விட்டதாகவும், அவர் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துமனை நிர்வாகம் தெரிவித்தது.
முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில், முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

No comments:
Write comments