Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 11, 2016

அமேசானில் அசத்தும் ஆன்லைன் ஆஃபர்கள்!


ஆடியில் மட்டுமே சலுகை என இருந்துவந்த நமது மக்களுக்கு, ஆன்லைன் ஷாப்பிங் மூலம் அடிக்கடி சலுகைகள் கிடைக்கின்றன. இண்டர்நெட் ஷாப்பிங் என்றாலே அதிகளவு சலுகைகள்தான் எனலாம். பல்வேறு ஆன்லைன் விற்பனைகள் புதிய சாதனைகளைப் படைத்திருக்கின்றன. அனைத்துப் பொருட்களையும் அதிகளவு சலுகைள் மற்றும் எக்கச்சக்க தள்ளுபடிகளுடன் வழங்குவதில் அமேசான் சிறப்பான இடம் பிடித்திருக்கிறது. தற்சமயம், அமேசான் நிறுவனம் பல்வேறு விநியோகஸ்தர்களுடன் இணைந்து தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்துவருகிறது. செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனையில் அதிகபட்சம் 50 சதவிகிதம் வரை சலுகை மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், தொலைக்காட்சி மற்றும் குளிரூட்டி போன்ற கருவிகள் முன்பைவிட மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதோடு ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தும்போது 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. தவணைமுறையில் பொருட்களை வாங்குவோருக்கும் கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்தபட்சம் ரூ.13,000 செலுத்தி பொருட்களை வாங்குவோர் இந்தச் சலுகையைப் பெறமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிகபட்சம் ரூ.2000 வரை கேஷ்பேக் பெறமுடியும். தவணை முறையில் வாங்கும்போது கேஷ்பேக் பணம் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் வழங்கப்படும். சலுகையில் அனைத்துவிதமான முன்னனி பிராண்டுகளிலும் பொருட்கள் கிடைக்கின்றன.
மைக்ரோமேக்ஸ் 109 செமீ (43 இன்ச்) ஃபுல் எச்டி எல்இடி டி.வி.
பிலிப்ஸ் 55 செமீ (22 இன்ச்) ஃபுல் எச்டி எல்இடி டி.வி.
LG GC-B207GlQV fridge
Videocon VA163BBR-FDA
Godrej RD-Edge-185-E2H-4.2
Kenstar KSM55.WN1 ஸ்ப்லிட் ஏசி
LG T7567TEELH சலவை இயந்திரம்
Bosch WAK24168IN சலவை இயந்திரம்
LG GL-I322RPZL குளிர்சாதனப் பெட்டி
இதுபோன்று இன்னும் பல சாதனங்களுக்கு ஆஃபர் போட்டுள்ளது அமேசான் நிறுவனம்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic