காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தாமதுபடுத்தக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவிரி நீர் தொடர்பான வழக்கில் காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இதனை தாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இதே உத்தரவில் தினமும் 6000 கன அடி நீரை செப்டம்பர் 27 வரை திறந்துவிட வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. கடந்த செப். 12 தேதிய உத்தரவுப்படி குறைந்தபட்சம் 12,000 கன அடி நீரையாவது இம்மாத இறுதிவரை திறந்து விட உச்சநீதி மன்றம் முடிவு செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments