புதிய கட்சியை துவங்குவதற்கான பணிகளை ராஜபக்சே வேகமாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ராஜபக்சே தற்போது பல் புடுங்கப்பட்ட பாம்பாக சுற்றி வருகிறார். இருப்பினும் இழந்த அதிகாரத்தை மிட்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதில் முதற்கட்டமாக தனது ஆதரவாளர்களுடன் கூடி ஓர் புதிய கட்சியை துவக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
புதிய கட்சியை விரைவி துவக்கி அதன் மூலம் எந்த தேர்தலையும் சந்திக்க ராஜபக்சே தலைமையிலான அணி தயாராக இருப்பதாக விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார். எனினும் புதுக்குடியிருப்பு மற்றும் இரு பிரதேச சபை தேர்தல் விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் புதிய கட்சிகளை பதிவதற்கான சாத்தியமில்லை என தெரிகிறது. அதே சமயம் ராஜபக்சே அரசுக்கு எதிராக புதிய கட்சியை துவக்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிபர் ஸ்ரீசேனா கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments