அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மீது அரசு, தேசத்துரோக வழக்கு பதிவு செய்வதாகவும், இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதை யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘தேசத்துரோகம் ஒரு கடுமையான குற்றம். ஆனால் கருத்து வேறுபாடுகளை நசுக்குவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள், கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி ஆகியோர் மீதுகூட தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது' என அவர் சுட்டிக்காட்டி வாதாடினார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், ''அரசை விமர்சிக்கும் விதமாக யாராவது கருத்து தெரிவித்தால், அது தேசத்துரோக அல்லது அவதூறு சட்டத்தின் கீழ் குற்றமாகாது. தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்யும்போது (இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124(ஏ)-ஐ), உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
தேசத்துரோக சட்டம் குறித்து நாங்கள் விளக்க வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக பீகார் மாநில அரசுக்கு எதிரான கேதார்நாத் சிங்கின் வழக்கில், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தெளிவாக விளக்கி உள்ளது" என்றும் தெரிவித்தனர்.
ஆனாலும், இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும், காவல் துறைத் தலைவர்களுக்கும் இந்த உத்தரவு நகலை அனுப்பி வைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை.

No comments:
Write comments