Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 19, 2016

ராம்குமார் மரணத்தில் சந்தேகம் - நீதிபதி சந்த்ரு

சென்னை பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார். அதில், ராம்குமாரின் மரணத்திற்கு சிறைத்துறை அதிகாரிகளே பொறுப்பு. ராம்குமாரின் மரணம், வழக்கை விரைவில் முடிப்பதற்கான முயற்சியாக தோன்றுகிறது. சிறையில் பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கும் நிலையில் ராம்குமாரின் உயிரிழப்பு சந்தேகம் அளிக்கிறது.

சிறையில் நிகழும் மர்மங்களுக்கு சிறைத்துறை அதிகாரிகளே பொறுப்பு. நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள் சிறையில் அடைக்கும்போது மட்டும் எப்படி உடல்நிலை சரியில்லாமல் போகிறது?

அனைத்து சிறைகளிலும் வயர்கள் வெளியில் இருக்கும்படி இருக்காது. சுவற்றில் பதிக்கப்பட்ட நிலையில்தான் மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். ராம்குமாரின் மரணம் திட்டமிட்டு நடைபெற்றுள்ளது. அவரது மரணம் பல சந்தேகங்களை எழுப்புகிறது என தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic