ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று அவரது தந்தை பரமசிவம் தெரிவித்துள்ளார்.
ராம்குமார் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள அவர், போலீசார் திட்டமிட்டு தனது மகனை கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே உடலை வாங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே ராம்குமார் மரணத்தால் உறவினர்கள் மட்டுமின்றி அவரது சொந்த ஊர் மக்கள் அனைவரும் சோகமடைந்துள்ளனர். காவல்துறையின் செயல்பாட்டுக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் ராம்குமார் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முறையிடுகிறார். உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் இன்று காலை 10.30 மணிக்கு முறையீடு செய்கிறார். ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை முறையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

No comments:
Write comments