கோயில்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் செயல்பாடுகளை தடை செய்யப்போவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்தி வரும் உடற்பயிற்ச்சி மற்றும் ஆயுதப்பயிற்ச்சி வகுப்புகள் கேரளாவில் பல கோயில் வளாகத்திலும், கோயிலுக்கு சொந்தமான பகுதிகளிலும் நடத்தி வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு 73வது விதியின் படி தடை விதிக்க வேண்டுமென கோரி சட்டவாரிய அமைச்சகம் முதலமைச்சர் பிணராயி விஜயனுக்கு பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பான முழு அறிக்கையை தயார் செய்த சட்ட அமைச்சகம் முதலமைச்சரிடம் சமர்பித்துள்ளது. இதனை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஒப்படைத்தார். "ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க கோரி முதலமைச்சரிடன் அறிக்கை சமர்பித்திருக்கிறோம். மா நிலத்தில் உடற்பயிற்சி, தற்காப்பு பயிற்சி போன்ற நடவடிக்கைகள் 73வது விதியின் படி கேரளாவில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதனை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீறி செயல்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இத்தகைய செயல்களுக்கு தடை விதிக்கவே முதலமைச்சரின் பரிந்துரை செய்துள்ளோம்" என சட்டத்துறை செயலாளர் பி.ஜி ஹரீந்தநாத் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆர்.எஸ்.எஸ், பாஜக மற்றும் ஆளுங்கட்சியினரிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. இரு தரப்பினரிடையே நடைபெற்று வரும் மோதலில் அவ்வப்போது கொலைகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments