ஓசூரில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் செயலாளர் சூரி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.விஷ்வ இந்து பரிஷத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சூரி ஒசூரில் வசித்து வந்தார். நேற்றிரவு இவர் இரயில் நிலையம் அருகே நடந்து சென்ற போது திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டார். பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சூரியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சூரி பரிதாபமாக உயிரிழந்ததார்.
அவரின் உடல் ஒசூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனை முன்பு குவிந்ததால் பரபரப்பு எற்பட்டது. இந்த கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூரி கொலை செய்யப்பட்டதற்கு இந்து இளைஞர் எழுச்சி பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
No comments:
Write comments