Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 20, 2016

அசோகா மன்னர் எப்பொழுது பிறந்தார்..? ஆர்.டி.ஐ மூலம் கேள்வி


அசோகா மன்னர் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரியாமல் நான்கு துறையின் அமைச்சர்கள் முழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்திய சாமானியன் தனது நாடு தொடர்பாக எந்த கேள்வியும் கேட்கலாம் என்ற வழிவகை செய்யப்பட்ட தகவர் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பலரும் பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதே சமயம் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பல சமயம் விடை தெரியாமல் சம்பந்தபட்ட துறையினர் முழித்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. சில வருடங்களுக்கு முன் ஒரு பள்ளி சிறுமி மகாத்மா காந்திக்கு 'தேசத்தந்தை' என்ற பட்டத்தை கொடுத்தது யார்? என கேள்வி கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

தற்போது அருண் குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அவர் அளித்துள்ள மனுவில் "மன்னர் அசோகா பிறந்த சரியான தேதி என்ன? அவர் இறந்த தேதி என்ன? எதனை அடிப்படையாக வைத்து இந்த இரு தினங்களை அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது? என கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு விடை தெரியாததால் பிரதமர் அலுவலகம் இதனை மத்திய தகவல் துறை (சி.ஐ.சி)க்கு அனுப்பி வைத்தது.

தற்போது பாதுகாப்பு, நிதி, உள்துறை மற்றும் கலாச்சாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் இதற்கான விடையை தேடிக்கொண்டிருக்கின்றனர். மனு அளித்த அருண் குமாருக்கு இந்த கேள்விக்கான விடையை கண்டுபிடிப்பதற்காக சம்பந்தபட்ட துறையினருக்கு அனுப்பிவைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic