உத்திரப்பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் உ.பி. தேர்தலுக்கு காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகள் தயாராகி விட்டன.
பிரதான கட்சிகளான இவற்றில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மட்டும்தான் இன்னும் யாத்திரையை அறிவிக்கவில்லை. மற்ற மூன்று கட்சிகளுமே ஆளுக்கொரு யாத்திரையை அறிவித்திருக்கிறார்கள். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ‘கிஷான் யாத்திரை’ என்ற பெயரில் 2,500 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார்.
அதில் பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் அவர், ஆளும்கட்சியான சமாஜ்வாதி கட்சியை விமர்சிப்பதில்லை. உத்திரப்பிரதேசத்தில் உள்ள 407 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளைச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரையில் விவசாயிகளையும் கிராம மக்களையும் சந்தித்து பேசி வருகிறார் ராகுல் காந்தி. அமைதியாக இருந்த சமாஜ்வாதி முதல்வர் அகிலேஷ் யாதவ், ‘சமாஜ்வாத் விகாஷ் யாத்ரா’ என்ற ஒன்றை அறிவித்துள்ளார். அவரும் ராகுல் பாணியில் கிராம மக்களைச் சந்திக்க இருக்கிறார்.
இந்நிலையில் பாஜக ‘பரிவர்த்தன் யாத்ரா’ என்ற பெயரில் 100 நாள் யாத்திரையை அறிவித்துள்ளது. யாத்திரையின் இறுதி நாள் நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மட்டுமே இன்னும் யாத்திரையை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்தும், சமாஜ்வாதி வேட்பாளராக அகிலேஷ் யாதவும், பகுஜன் கட்சி வேட்பாளராக மாயாவதியும் களமிறங்கியிருக்கும் நிலையில் பாஜக மட்டும் தன் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இழந்த ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும், உ.பியை குறிவைத்து பாஜகவும், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள அகிலேஷ் யாதவும், மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற மாயாவதியும் போராடும் நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம் என்கிறது கருத்துக்கணிப்புகள்.

No comments:
Write comments