Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 27, 2016

நேருக்கு நேர் மோதிய ஹிலாரி - டிரம்ப்

debate between hillary and trump

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன்-டொனால்டு டிரம்ப் இடையே முதல் விவாதம் நேற்று இரவு நடைபெற்றது.

நியூயார்க் ஹாப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் ஹிலாரி - டிரம்ப் இடையேயான விவாதம் நடைபெற்றது. நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, பொருளாதாரம் குறித்த திட்டங்களை முன்வைத்து 2 பேரும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். விவாதத்தில் பேசிய டிரம்ப் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு திருடப்படுகிறது என குற்றம் சாட்டினார். மேலும் முதலீடுகளை ஏற்க வரிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என டிரம்ப் கூறினார்.

இதேபோல் விவாதத்தில் பேசிய ஹிலாரி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவேன் என வாக்குறுதி அளித்தார். 2008 முதலே தொழில் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கிறது எனவும் ஹிலாரி கூறினார். மேலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என ஹிலாரி உறுதி அளித்தார். வரியை ஒழிப்பதால் மட்டும் நாடு வளர்ச்சி அடையாது என ட்ரம்ப் கூறியதற்கு ஹிலாரி பதில் அளித்துள்ளார். ட்ரம்பின் திட்டம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மந்தமாக்கி விடும் எனவும் ஹிலாரி கூறியுள்ளார். பொருளாதாரத்தை உயர்த்த ஹிலாரியிடம் எந்த திட்டமும் இல்லை என டொனால்டு ட்ரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic