ரோட்ரிகோ டுடர்டே - பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர், போதைப் பொருள் கடத்தலைக் குறைக்க, கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து, பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியிருக்கும் சர்வாதிகார குணம் கொண்ட தலைவர். சமீபத்தில் அமெரிக்க அதிபரோடு நடக்கவிருந்தச் சந்திப்புக்கு முன்னர், ஓபாமா பற்றிய ரோட்ரிகோ தெரிவித்த கருத்துகளால் அவருடனான சந்திப்பை ஓபாமா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் டுடர்டே, அமெரிக்காவை விட்டு பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன் நாடு ஒதுங்கி இருப்பதாக அறிவித்திருக்கிறார். “தற்போது அமெரிக்கா தோல்வியடைந்து விட்டது. உங்கள் கருத்தியல் ஓட்டத்தில்தான் நான் என்னை பொருத்திப் பார்க்கிறேன்” என சீனாவின் கொள்கையைக் குறிப்பிட்டு டுடர்டே கூறியிருக்கிறார். மேலும், “ஒருவேளை நான் ரஷ்யாவுக்கும் சென்று புதினை சந்தித்து, இப்போது சீனா – பிலிப்பைன்ஸ் - ரஷ்யா என நாம் மூவரும் அமெரிக்காவுக்கு எதிராக இருக்கிறோம் என்று சொல்வேன். அது தான் ஒரே வழி” என்று அவர் தெரிவித்திருக்கிறார். தென் சீனக்கடல் காரணமாக, சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் விரோதம் இருந்திருக்கிறது. ஆனால், தற்போது சீனாவுடன் நெருங்கநினைக்கும் டுடர்டே, புது யுக்தியை கையாள்கிறார். விருந்தளிப்பவர்களை அவமானப்படுத்தக்கூடாது என்பதில் டுடர்டே மிக கவனமாக இருக்கிறார். பிலிப்பைன்ஸில் புருவம் உயர்த்தும் டுடர்டே, சீனாவில் மக்கள் மனதை கவர நினைக்கிறார் என அரசியல் பேராசிரியர் ஜாவத் ஹேதாரியன், டுடர்டேவின் சீனப் பயணம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Write comments