Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 25, 2016

இந்திய இராணுவத்திடம் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி!

indian army arrested pakisthan terrorist

க‌ஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி கைது செய்யப்பட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

க‌ஷ்மீரில் உரி இராணுவ முகாம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து எல்லைப் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முன்தினம் அதிகாலை பிராக்வல் எல்லையில் ஓர் இளைஞர் க‌ஷ்மீருக்குள் ஊடுருவ கம்பி வேலியை அறுத்துக் கொண்டிருந்தான். அவனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்தனர்.

விசாரணையில் அவன் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், சியால்காட் பகுதியைச் சேர்ந்த அப்துல் கயாம் என்பது தெரியவந்தது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அவன் கைதுசெய்யப்பட்டான்.

இந்தியாவுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபடும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் ஹபீஸ் சையது, சையது சலாவுதீன் மற்றும் க‌ஷ்மீர் பிரிவினைத் தலைவர்கள் சையது அலி ஷா கிலானி, யாசின் மாலிக் ஆகியோருடன் அப்துல் கயாமுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவன் பாதுகாப்பு படைகளிடம் அளித்த வாக்குமூலத்தில், பாகிஸ்தானை சேர்ந்த ஏழை இளைஞர்களை தீவிரவாத அமைப்புகள் தங்கள் வலையில் சிக்கவைத்து தீவிரவாதிகளாக மாற்றி வருகின்றன என்று தெரிவித்தார்.


ஸ்ரீ நகரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு வன்முறை அபாயம் கருதி, 7 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் 4 பகுதிகளில் நேற்று ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டது. குப்வாரா மாவட்டத்தின் ஹண்டுவாரா நகரிலும் நேற்று ஊரடங்கு அமலில் இருந்தது. க‌ஷ்மீர் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் 144 தடை உத்தரவு நீடித்தது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic