Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 25, 2016

சசிகுமாரை கொன்றவர்கள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும்!

culprit should be arrested those who killed sasikumar

கோவையில் கொல்லப்பட்ட இந்துமுன்னனி பிரமுகர் சசிகுமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென திமுக பொருளாளர் மு.க ஸ்டாலில் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது,

இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர மக்கள் செய்தித்தொடர்பாளர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதால் கோவை மற்றும் திருப்பூர் மாநகரங்களில் வன்முறை வெறியாட்டம் தலைவிரித்தாடியிருக்கிறது.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் 20க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். வர்த்தக நிறுவனங்கள், வங்கி ஏ.டி.எம்.கள் என கண்களில் பட்டதை எல்லாம் அடித்து நொறுக்கியவர்கள் பாலசுப்பிரமணியம் என்ற காவலர் மீதும் கல்வீசி தாக்கியுள்ளார்கள்.

போலீஸ் வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதோடு மட்டுமின்றி, சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த அப்பாவி பொதுமக்களின் வாகனங்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் ஆட்டோக்களையும் எரித்துள்ளார்கள்.

இந்த வன்முறையை காவல்துறை முன்கூட்டியே உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது கவலைக்குரியது.

இந்து முன்னனி பிரமுகரை கொலை செய்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதிலும், அமைதியை விரும்பும் தமிழகத்தில் இது போன்ற கொலைகள் அரங்கேறுவதை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.

அதே நேரத்தில் நடந்த கொலையை காரணம் காட்டி அப்பாவி பொதுமக்களின் சொத்துக்களுக்கும், அரசு சொத்துக்களுக்கும் சேதம் விளைவிப்பதையும், சமூக அமைதிக்கும் மத நல்லிணக்கத்திற்கும் சவால் விடும் வகையில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதையும் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அ.தி.மு.க. ஆட்சி துவங்கியதிலிருந்து இந்து முன்னனி பிரமுகர்கள் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

ஆனால் இந்த கொடூரக் கொலைகளில் ஈடுபடும் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து தடுத்து நிறுத்திடவோ, சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திடவோ தமிழக காவல்துறை முன் வரவில்லை.

இந்து முன்னனி பிரமுகர் கொலை மட்டுமின்றி, தமிழகத்தில் நடக்கும் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களிலும் இதுதான் தமிழக காவல்துறையின் இன்றைய எதார்த்தமான நிலையாக இருக்கிறது.

தமிழக காவல்துறை அ.தி.மு.க.வின் ஏவல் துறையாக செயல்பட வேண்டிய நிர்பந்தம் உள்ளதால் தான் இது போன்ற கொலைகளையும் தடுக்க முடியவில்லை. கொலைக்குப் பிறகு நடக்கும் வன்முறைகளையும் அடக்க முடியவில்லை.

“யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை” என்ற நிலை அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏற்பட்டிருப்பதற்கு காவல் துறையின் திறமைக்குறைவு தான் காரணம் என்று கூறமாட்டேன்.

ஆனால் ஸ்கார்ட்லாந்து யார்டுக்கு இணையாக திறமை பெற்ற தமிழக காவல் துறைக்கு உரிய சுதந்திரம் அளித்து செயல்பட விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியின் அலட்சியப்போக்கு தான் என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.

ஆகவே இந்து முன்னனி பிரமுகர் சசிகுமார் கொலையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளம் கண்டு நீதியின் முன்பு நிறுத்த வேண்டும்.

இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட கடைகள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் உரிய இழப்பீடு வழங்கி, தாக்குதலுக்குள்ளான காவலர் பால சுப்பிரமணியத்திற்கு உயர்தர சிகிச்சை அளிக்க அரசு முன்வர வேண்டும்.

பெருமைக்குரிய மண்ணில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையையும் காவல்துறை அனுமதிக்கக் கூடாது. இது போன்ற கலவரங்கள் ஏற்படாமல் தடுத்து அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக காவல்துறைக்கு இருக்கிறது.

அதற்கு ஏற்ற முழு சுதந்திரத்தை காவல்துறைக்கு அதிமுக அரசு அளித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பூரண அமைதி திரும்ப உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic