Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 6, 2016

விஸ்வநாதன் ஆனந்த் வெல்வாரா?


மாஸ்கோவில் நடைபெற்று வரும் 10ஆவது டால் நினைவு சர்வதேச செஸ் போட்டியின் ஏழாவது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவைச் சேர்ந்த சுவிட்லரை எதிர்கொண்டார். இதில் 44ஆவது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்தார்.
இதேபோல் மற்ற வீரர்களுக்கான ஏழாம் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், விஸ்வநாதன் ஆனந்த் நான்கு புள்ளிகளுடன் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் உள்ளார். ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் மூன்றாவது இடத்திலும், அர்மேனியாவின் லேவன் அரோனியன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
ஆனந்த் அடுத்த சுற்றில் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாட்சியை எதிர்கொள்கிறார். இந்தச் சுற்று அவருக்கு கடும் சவாலாக இருக்கும். இயன் நெபோம்னியாட்சி தற்போது ஐந்து புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஒரு சமயத்தில் மற்ற வீரர்களுக்கு கடும் சவாலாக திகழ்ந்த ஆனந்த் சமீப காலமாக மிகவும் திணறிக் கொண்டிருப்பது தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic