Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 11, 2016

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர்கள் 3 பேர் பலி...!


ஆலங்குளம் அம்பை ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் கிருபாகரன் (வயது 21). இவர் செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில்  படித்து வந்தார்.

தொடர் விடுமுறையை முன்னிட்டு அதே கல்லூரியில் படித்து வரும் கிருபாகரனின் நண்பர்கள் செங்கல்பட்டை சேர்ந்த சோபன்பாபு,  தமீம்அன்சாரி ஆகியோருடன் கிருபாகரன் சொந்த ஊரான ஆலங்குளத்திற்கு வந்தார். பின்னர் நண்பர்கள் 3 பேரும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனர். அங்கிருந்து ஊருக்கு திரும்பி வந்த பின்னர் நேற்று மதியம் ஆலங்குளம் அருகே உள்ள முக்கூடல் தாமிரபரணி ஆற்றிற்கு குளிக்க சென்றனர்.

ஆற்றில் ஆழம் அதிகம் உள்ள பகுதியில் குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் 3 பேரும் திடீரென தண்ணீரில்  மூழ்கினர். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்த அவர்கள் சிறிது நேரத்தில் மூச்சு திணறி இறந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முக்கூடல் போலீசார் அங்கு வந்து 3 பேரின் உடலையும் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான அதே இடத்தில் கடந்த 1-ந் தேதி குறிப்பன்குளத்தை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். அதற்கு முன்னரும் ஆற்றுக்கு குளிக்க சென்றவர்கள் பலர் அதே இடத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

தொடர் பலிகள் நடந்து வரும் தாமிரபரணி ஆற்றின் அந்த பகுதியில் அதிக அளவில் மணல் அள்ளப்பட்டுள்ளதால் சுழல் உருவாகியுள்ளது. அதனை அறியாமல் பலரும் சுழலில் சிக்கி பலியாகி வருகின்றனர். இதை தடுக்க போலீசார் எச்சரிக்கை பலகை வைப்பதுடன், ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic