Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 23, 2016

மநகூ தோற்கும் என்பது ஏற்கனவே தெரியும் - வைகோ




தேமுதிக+மக்கள் நலக்கூட்டணி + தமாக கூட்டணி தேர்தலில் தோற்கும் என்பது தேர்தல் நடைபெறுவதற்கு 4 நாட்கள் முன்பாகவே எனக்கு தெரிந்துவிட்டது என வைகோ பேசியுள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக மக்கள் நலக்கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியுற்றதோடு மட்டுமல்லாமல் இப்படி நடக்கும் என்பது தனக்கு ஏற்கனவே தெரியும் என வைகோ பேசியுள்ளார். தேர்தல் முடிவு வெளியானதுலிருந்து வைகோவை சரமாரியாக நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். தேர்தல் முடிவு வெளிவந்து 4 நாட்கள் மேல் ஆகியும் பத்திரிகையாளர்களுக்கு எந்த பேட்டியும் கொடுக்காத வைகோ இன்று திருவாய் மலர்ந்துள்ளார்.

கடந்த 30 வருஷத்திற்கும் மேலாக அரசியல் களத்தில் பணியாற்றி வருகிறேன், மக்களுடைய மனநிலையை நன்றாக புரிந்து கொள்ளும் தன்மை எனக்கு உண்டு. மக்கள நலக்கூட்டணிக்கு ஆரம்பத்தில் இருந்த மக்களின் ஆதரவு இறுதியில் குறைந்துகொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போதே தெரிந்துவிட்டது மக்கள் நலக்கூட்டணி தோல்வி அடையும் என்று. விஜயகாந்த் மற்றும் திருமாவளவனாவது வெற்றி பெற வேண்டும் என்று எண்ணினேன்.  தேர்தலின் போதே கோவில்பட்டியில் ஜாதி மோதல்களை ஏற்படுத்த முயன்றார்கள். என்னால் யாருக்கிடையிலும் மோதல் வரக்கூடாது என்பதுனாலேயே தேர்தலை விட்டு விலகினேன். நான் போட்டியிட்டிருந்தாலும் என்னை தோற்கடித்திருப்பார்கள்.

திமுக அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு பணத்தை வாரி இரைத்தார்கள், அதனாலேயே அவர்களால் வெற்றி பெற முடிந்தது. ஏழை எளிய மக்களுக்கு அந்த பணம் கிடைத்திருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பேன், ஆனால் நடுத்தர மக்களும் பணக்காரர்களும் அந்த பணத்தை பெற்றுக்கொண்டை பார்க்கும்போது தமிழக அகலபாதாளத்தில் சென்றுவிட்டது என்பதையே உணருகிறேன் என்று வைகோ தெரிவித்திருக்கிறார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic