Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 11, 2016

துபாயில் ஒற்றை இலக்க நம்பர் பிளேட் - ரூ. 60 கோடிக்கு ஏலம் எடுத்த இந்தியர்...!


துபாயில் நடந்த ஏலத்தில் ஒற்றை இலக்க நம்பர் பிளேட்டை, இந்தியர் ஒருவர் ரூ.60 கோடிக்கு ஏலம் எடுத்தார். துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின்  சார்பில்  வாகன நம்பர் பிளேட் ஏலம் துபாயில்  நடைபெற்றது. இதில் சிறப்பு எண்களாக கருதப்படும் ஒற்றை இலக்கம் முதல் மூன்று இலக்கம் வரையில் நம்பர் பிளேட்கள் ஏலத்தில் விடப்பட்டது. இதில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


ஏலத்தில் பல்வேறு எண்களை போட்டி போட்டு பிரமுகர்கள் வாங்கினர். அவர்கள் ஒவ்வொருவரும் பல லட்சங்களையும், கோடிகளையும் செலவழித்து தங்களுக்கு விருப்பமான நம்பர் பிளேட்களை ஏலத்தில் எடுத்தனர். இதில் குறிப்பாக டி-5 என்ற எண்ணுக்கு கடும் போட்டி நிலவியது. இதனை ஏலத்தில்  பங்கேற்ற துபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபர்  பல்விந்தர் சாஹ்னி 33 மில்லியன் யு.ஏ.இ திர்ஹமஸ்சுக்கு (இந்திய மதிப்பு ரூ.60 கோடி) கொடுத்து தனதாக்கி கொண்டார். இதுவரை நடைபெற்ற நம்பர் பிளேட் ஏலத்தில்  இந்த எண்ணுக்குத்தான் அதிக தொகை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic