Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 11, 2016

Galaxy Note-7 பயன்படுத்த வேண்டாம்...!


இத்தாலி நாட்டில் சமீபத்தில் ஒருவர் கடந்த மாதம் தனது ’சாம்சங் கேலக்சி நோட் 7’ ஸ்மார்ட் போனின் பேட்டரியை ரீசார்ஜ் செய்தபோது அந்த செல்போன் திடீரென்று வெடித்து சிதறியது.


இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும், குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் ஆஸ்திரேலியா ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும் போது சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை ஆன் செய்வது மற்றும் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பயணிகளுக்கு வலியுறுத்தியது.



தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங்சின் புதுரக போன் வெடிக்கும் அபாயம் உள்ளதாக வந்த தகவலையடுத்து உலகளவில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் போன்களை அந்நிறுவனம் திரும்பப்பெற்றது. புதிய போன்களின் விற்பனையையும் நிறுத்தி வைத்தது.



ஆஸ்திரேலியாவில் சாம்சங் கேலக்சி நோட் 7 ரக போன்களும் திரும்பப்பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து, விமானத்தில் அந்த குறிப்பிட்ட ரக போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது.



பேட்டரி கோளாறால் திடீரென்று வெடித்து சிதறும் ’சாம்சங் கேலக்சி நோட் 7’ ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அந்நாட்டு மக்களை எச்சரித்தது.



அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள கேலக்சி நோட் 7 ரக ஸ்மார்ட் போன்களை திரும்பப் பெற்றுகொள்வது தொடர்பாக முறைப்படியான அறிவிப்பை சாம்சங் நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், திரும்பப் பெறப்படும் போன்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன? என்பது தொடர்பாக அந்நிறுவனம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



இதற்கிடையில், குறைபாடு கொண்ட கேலக்சி நோட் 7 ரக ஸ்மார்ட் போன்களுக்கு மாற்றாக புதிதாக மாற்றித் தரப்பட்ட இதேவகை போன்களும் தீபற்றி எரிந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.



இந்நிலையில், இவ்விவகராம் தொடர்பாக விசாரித்துவரும் சாம்சங் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’கேலக்சி நோட் 7 ரக ஸ்மார்ட் போன்களின் விற்பனை மற்றும் குறைபாடு கொண்ட தயாரிப்புக்கு பதிலாக வேறு செல்போன்களை மாற்றித் தருவதை  நிறுத்தி வைக்குமாறு உலகில் உள்ள எங்களது முகவர்களை அறிவுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 



தற்போது இந்தவகை போன்களை பயன்டுத்தி வரும் வாடிக்கையாளர்களும், குறைபாடுகளுக்காக மாற்றாக புதிய போன்களை பெற்ற வாடிக்கையாளர்களும் தங்களது செல்போன்களை பயன்படுத்தாமல் ‘ஸ்விட்ச்ஆப்’ செய்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என தெரிவித்துள்ளது.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic