முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி விருத்தாசலம் புதுக்கூரைபேட்டையில் அதிமுக தொண்டர் கணேசன் என்பவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டி, மாநிலம் முழுக்க தொண்டர்கள் பல வகையான நேர்த்திக் கடன்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், தேவையற்ற வதந்திகள் வெளியாவதால் கட்சியினர் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றனர்.இதுபோல வேதனையடைந்த விருத்தாச்சலம், புதுகூரைப்பேட்டையை சேர்ந்த கணேசன் என்பவர், இன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஆபத்தான நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டுள்ளார். விருத்தசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் நேரில் சந்தித்து அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
30 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் இருப்பதால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments