இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஊடகங்களில் அதிரடியாக பேசுபவர் அர்ஜூன் சம்பத். இவர் தனது வீட்டில் துப்பாக்கிகளை வைத்து ஆயுதபூஜையில் ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளார். இதனால் சமூக வலை தளங்களில் இந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது. துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் இவருக்கு யார் வழங்கியது என்றும், சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் கொடூர ஆயுதங்களை வைத்திருக்கும் அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வேண்டுமென கருத்துக்கள் வெகுவாக பரவியது.
இந்நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து அந்த புகைப்படங்களை நீக்கியுள்ளார்.
No comments:
Write comments