முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நடிகர் விவேக் சிறப்பு வழிபாடு நடத்தினார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நடிகர் விவேக் முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிப்பாடு நடத்தினார். இந்த சிறப்பு வழிப்பாட்டில் நடிகர் விவேக் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட 27 வகையான படையல்களை அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தினார்.
தன்னுடைய பல திரைப்படங்களில் நாத்திகவாதி போல் பேசும் நடிகர் விவேக் தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றும், அதே சமயம் மூட பழக்கவழக்கங்களுக்கு தான் எதிரானவன் என கூறியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments