Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 27, 2016

ஒருமித்த கருத்தில்லாமல் பொது சிவில் சட்டம் சாத்தியமில்லை: வெங்கய்யா நாயுடு!


ஒருமித்த கருத்தில்லாமல் பொது சிவில் சட்டம் நிறைவேற்ற முடியாது என்று பாராளுமன்ற வெளிவிவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: “மூன்று முறை ‘தலாக்’ கூறுதல், பொது சிவில் சட்டம் மற்றும் ராமர் கோயில் விவகாரங்களை உத்திரப்பிரதேசத் தேர்தலின்போது அரசியல் ஆதாயத்துக்காக பாஜக எழுப்பாது. வளர்ச்சி குறித்தே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். மூன்று முறை தலாக் கூறுவதை மத அடிப்படையில் மத்திய அரசு பார்க்கவில்லை. இது பெண்கள் சம்பந்தப்பட்ட உரிமை ஆகும். முஸ்லிம் விவகாரத்தில் நாங்கள் தலையிடுவதாக சிலர் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறு. இந்து சட்டம், விவாகரத்து சட்டம், இந்து திருமண தடை சட்டம், வரதட்சணை தடை சட்டம் போன்றவை நாடாளுமன்றத்தால் சட்டம் நிறைவேற்றப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. 

சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து சட்டக்கமிஷன் மக்களிடம் கருத்து கேட்கிறது. ஒருமித்த கருத்தில்லாமல் சிவில் சட்டம் நிறைவேற்ற முடியாது. மூன்று முறை தலாக் கூறுவதை வைத்து பாஜக அரசியல் செய்கிறது என்று கூறும் குற்றச்சாட்டுகள் நியாயமற்றது. மூன்று முறை தலாக் கூறுவது குறித்து உச்சநீதிமன்றம் நல்ல முடிவை வெளியிடும் என்ற நம்பிக்கை உள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic