Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 27, 2016

தொழில்துறையில் தமிழகம் சரிவு: திருநாவுக்கரசர்!


வர்த்தகம் மற்றும் தொழில் ஆய்வுகளின் பட்டியலில் தமிழகம் சரிவை எட்டியுள்ளதாக திருநாவுக்கரசர் கவலை தெரிவித்துள்ளார். 

வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை கடந்த 18, 19ஆம் தேதிகளில் இந்தியா முழுவதும் கள ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதன் அடிப்படையில் ஆந்திர மாநிலம் 99.09 புள்ளிகளோடு முதலிடத்திலும், தெலங்கானா 99.09 புள்ளிகளோடு இரண்டாவது இடத்திலும், குஜராத் 97.92 புள்ளிகளோடு மூன்றாவது இடத்திலும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தமிழகம் தமிழகம் 18ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு 62.80 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளது. 

இதுதொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு பின்னால் இருந்த மாநிலங்கள்கூட வேகமான சீர்திருத்த வளர்ச்சிகளால் முன்னேறியுள்ளன. இதற்காக சர்வதேச சுற்றுப்பயணங்கள், தொழில் முதலீட்டாளர்களை நேருக்கு நேராகச் சந்தித்து முதலீடுகளை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர்களே நேரிடையாக செய்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 9 - 10, 2015இல் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.100 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டபோது ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தமிழக அரசு அறிக்கையின் வாயிலாகக் கூறியது. ஆனால், ஏறத்தாழ ஓராண்டுகளாகியும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்கிற விவரங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். 

தமிழ்நாட்டில் விவசாய வளர்ச்சி வேகமாக குறைந்து வருகிறது. அதேபோல வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 31.3.2016 நிலவரத்தின்படி 83 லட்சத்து 33 ஆயிரத்து 864 பேர் வேலை வாய்ப்பு கோரி பதிவு செய்திருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 72 லட்சத்து 685 பேர் வேலைவாய்ப்பு பெறுவதற்காக கூடுதலாகப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடி வருகிறது. 

குறிப்பாக தமிழகத்தில் 560 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து வெளியே வருகிறார்கள். இவர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. வேலைவாய்ப்பைப் பெருக்குவதன் மூலமே தொழில் வளர்ச்சியை பெருக்க முடியும். அதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்” என்று கோரியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic