Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 14, 2016

பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு ஒத்துவராது..!

vali rehmani''பொது சிவில் சட்டம், இந்தியாவுக்கு உகந்தது அல்ல; பல்வேறு கலாசாரங்களையும் மதிக்க வேண்டும்,'' என, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் வாரிய தலைவர் வாலி ரெஹ்மானி தெரிவித்தார்.

முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படும், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் நடைமுறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

'ஆண், பெண் பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ள தலாக் முறையானது, ஒரு மதத்துக்கு தேவையில்லாத நடைமுறை' என, சுப்ரீம் கோர்ட்டில் அளித்த பதில் மனுவில், மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'இந்த பிரச்னை குறித்து, பொதுமக்கள் கருத்தை கேட்க வேண்டும்' என, உத்தரவிட்டது. அதன் படி, மத்திய சட்டக் கமிஷன், பொதுமக்கள் கருத்தை அறியும் வகையில், இணையதளத் தில் கேள்வித்தாள் ஒன்றை வெளியிட்டு உள்ளது; அதில், 'தலாக் முறை வேண்டுமா; பொது சிவில் சட்டத்தை கொண்டு வரலாமா' என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப் பட்டு உள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து, அகில இந்திய முஸ் லிம் தனிநபர் வாரிய தலைவர், வாலி ரெஹ்மானி கூறியதாவது:

சட்டக் கமிஷன், ஒரு தன்னிச்சை அதிகாரமுள்ள அமைப்பாக செயல்படவில்லை; மத்திய அரசின் ஒரு அமைப்பு போல் செயல்படுகிறது.பொது சிவில் சட்டத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ள, பொதுமக்கள் கருத்துக் கேட்பை, எங்கள் அமைப்பு புறக்கணிக்கிறது.

பொது சிவில் சட்டமானது, அரசியலமைப்பு சட்டத் திற்கும், அவரவர் தாங்கள் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கு உள்ள உரிமைக்கும் எதிரானது. பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு உகந்தது அல்ல. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தி யாவின் பலம்.அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட, அவரவர் தங்கள் மதத்தை பின்பற்றுவதற்கு உரிமை உள்ளது. இந்தியா மட்டும் அதற்கு எதிராக இருப்பது ஏன்?

கடந்த, 30 மாதங்களாக ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்வி களை மறைப்பதற்காக, பொது சிவில் சட்டம் பிரச் னையை எழுப்பியுள்ளனர். எல்லை யை பாதுகாக்க முடியாதவர்கள், உள்நாட்டில் மக்களிடையே உரசல்களைஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முஸ்லிம் களை விட, இந்துக்கள் தான் அதிக அளவில் விவாகரத்து கோரி வருகின்றனர். இந்நிலை யில், பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும்வகையில், சட்டக் கமிஷன் செயல்படுவதை கண்டிப்பதுடன், பொது கருத்துக் கேட்பையும் புறக்கணிக்கி றோம். இவ்வாறு அவர் கூறினார்.

'பெண்களுக்கு சம உரிமை அளிக்காத, பெண் களுக்கு எதிரான தலாக் முறை நீக்கப்பட வேண்டும்' என, முஸ்லிம் பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.

இது குறித்து,சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர் ந்துள்ள முஸ்லிம் பெண்கள் அமைப்பை சேர்ந் தவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்த கருத்தை முழுமையாக வரவேற்கிறோம். தலாக் முறை, பெண்களுக்கு எதிரானது; சம உரிமையை மீறுவதாக உள்ளது என, மத்திய அரசு மிகவும் திடமாகக் கூறியுள்ளது.

தலாக் முறை, அரசியலமைப்புச் சட்டம், சமூக நீதிக்கு எதிரானது. ஆண், பெண் பாகுபாடு ஒழி யும் வரை, வளர்ச்சியை அடைய முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic