Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 14, 2016

பிரிக்ஸ் லோகோ வடிவமைப்பிற்கு காங் எதிர்ப்பு!

brics conference logoபிரிக்ஸ்' மாநாடு நாளை துவங்க உள்ள நிலையில், அதற்காக வடிவமைக்கப்பட்ட ‛லோகோ'வுக்கு காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

‛பிரிக்ஸ்' கூட்டமைப்பின் 8வது மாநாடு கோவாவில் நாளை(அக்.,15) துவங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். இந்தியத் தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட காங்., எம்.பி., சாந்தாராம் நாயக் தெரிவித்ததாவது: ‛பிரிக்ஸ்' மாநாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட ‛லோகோ' பா.ஜ.,வின் தேர்தல் சின்னமான தாமரையைப் போன்று தோற்றமளிக்கிறது. உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ‛பிரிக்ஸ்' மாநாட்டுக்கு பா.ஜ., சின்னமான தாமரை போன்ற ‛லோகோ' உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic