சமூக வலைதளங்கள் மூலமாக இத்தகைய நல்ல விசயங்கள் இடம்பெறுவது வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான். ஒரு வாகன ஓட்டுனர் பாரீஸ் புறநகர் பகுதியில் வசிப்பவர். இவர்து பெயர் மாலிக் டையாலோ. இவர் தன் நண்பர்களுக்கு ஃபேஸ்புக் வழியாக அழைப்பு ஒன்றை கொடுத்திருந்தார்.
"நண்பர்கள் அனைவரும்ம் ஒன்றாக சேர்ந்து சமைக்க வேண்டும்!" என்பதே அந்த அழைப்பு.
திரண்டு வந்த நண்பர்கள் விறுவிறுவென 150 பேர் உண்ணும் அளவிற்கு உணவு தயார் செய்தார்கள். பின்னர் அதனை எடுத்துக்கொண்டு பாரீசின் நகரில் இருக்கும் ஒரு பகுதிக்குச்சென்று அங்கே பசியுடன் இருந்த அகதிகளுக்கு இலவசமாக வழங்கினார்கள்.
இச்சம்பவத்தை ஒரு நிமிட வீடியோவாக சுருக்கி ஃபேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார் மாலிக். இப்போது அந்த வீடியோ பரபரப்பாகி வருகிறது. 100,000 பார்வையாளர்கள், 500ற்கும் மேற்பட்ட பகிர்வுகள் என ஹிட்டாகியுள்ளது அந்த வீடியோ. இது பணம் சம்பாதிக்கவோ பெருமை தேடிக்கொள்ளவோ செய்யப்பட்டதல்லை... மன திருப்திக்காகவும், சந்தோஷத்திற்காகவும் செய்யப்பட்டது என மாலிக் தெரிவித்துள்ளார்.
மனித நேயம் கொண்ட மனிதர்கள் இன்னமும் வாழ்வதால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறதல்லவா..?

No comments:
Write comments