Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 14, 2016

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்திற்குள் மோடி உருவ பொம்மை எரிப்பு!

modi effigy set fireதசராவிழாவின் போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தசரா விழா கொண்டாடப்பட்டது.

அப்போது காங்கிரஸ் ஆதரவு இயக்கமான இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள், நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் தொடர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு தனது உறுதி மொழிகளை காக்க தவறியதாக கூறியும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களில் சிலர் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜகதேஷ் குமார் தெரிவித்து உள்ளார். 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic