உரிய நேரத்தில் காவிரி மேலாண்ம வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா தெரிவித்ததாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பாரதிய ஜனதா சார்பில் அமித்ஷாவை சந்தித்து காவிரி பிரச்சனை குறித்து பேசியதாகவும், விவசாயிகளை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை உரிய நேரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்ததாக பொன் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை, பிரதமர் மோடி வந்து பார்ப்பாரா என்ற கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஏற்கனவே ஒப்புக் கொண்ட பணிகள் ஏராளமாக பிரதமருக்கு உள்ளதால் அவர் ஜெயலலிதாவை வந்து பார்க்கும் வாய்ப்பு இல்லை என்றார். தமிழகத்தில் இடைக்கால முதலமைச்சர் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

No comments:
Write comments