Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 12, 2016

மலையாளிகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட பிரதமர்

கேரளாவில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர மோடி, கேரளாவில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மத்தியில் குழந்தை இறப்பு விகிதம் சொமாலியாவில் இருப்பதை விட அதிகம் என்று பேசினார்.

பிரதமரின் இந்த பேச்சு கேரள மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இது மிகப்பெரும் சர்ச்சையாக்கப்பட்டு "போமோனே மோடி" என்று கிண்டலடித்து பதிவுகள் இடப்பட்டு வருகிறது.


கேரளாவில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளுமே ஆட்சியைப்பிடித்து வருகிறது. பா.ஜ.கவிற்கு இதுவரை ஒரு எம்.எல்.ஏ கூட கேரளத்தில் இல்லை. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் எப்படியாவது கால்பதித்துவிடவேண்டும் என்கிற ரீதியில் பா.ஜ.க நிர்வாகிகள் கடுமையான பணிகளை மேற்கொண்டு வருகின்ற இந்த நிலையில், பிரதமரின் இந்த பேச்சு அக்கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிரதமரின் இக்கூற்றை அம்மாநில முதலைமைச்சர் வன்மையாக கண்டித்துள்ளார். பிரதமர் கூறியது முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், ஊட்டச்சத்து குறைப்பாட்டால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சொமாலியாவும் ஒன்று, ஆனால் அதனோடு கேரள மாநிலத்தை ஒப்பிட்டு பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.  இந்திய மாநிலத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் கேரளத்தில்தான் குறைவு. பிரதமர் தனது கூற்றை திரும்பப்பெற்று அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic