Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 12, 2016

எந்தக்கட்சிக்கும் வாக்களிக்கப்போவதில்லை - மு.க அழிகிரி

சட்டமன்ற தேர்தலில் தான் எந்த கட்சிக்கும் வாக்களிக்கப்போவதில்லை எனவும், திமுக மதுரை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடையும் என முன்னால் அமைச்சர் மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.

2011ஆம் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் திமுக தரப்பில் நிறையவே வித்தியாசம் காணப்படுகிறது. திமுகவில் தென்மாவட்டங்களில் மு.க அழகிரி மிகுந்த செல்வாக்குள்ளவராகவே இருந்தார். சென்ற தேர்தலில் திமுகவின் மதுரை மாவட்டத்தில் பிரச்சார பீரங்கியாக செயல்பட்ட மு.க அழிகிரி தற்போது சத்தமே வராதவாரு இருந்து வருகிறார்.

தான் திமுகவிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து அரசியலில் இருந்தே ஒதுங்கியுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ராகுல் காந்தியுடன் மு.க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மதுரையில் நடந்த போது, ஊருக்கு ஒதுக்கு புறமான தனது இல்லத்தில் தங்கியிருந்து டி.வியில் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் தனக்கு இயற்கையாக எதுவும் நேர்ந்துவிட்டால் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என கருணாநிதி வாய்மொழியாக ஒப்புதல் அளித்துவிட்டதால் மு.க அழகிரியின் முதல்வர் கனவும் முற்றிலுமாக சிதைந்துவிட்டது. திமுகவில் மீண்டும் ஐக்கியமாக எவ்வளவோ முயற்சித்தும் ஸ்டாலினின் விடாப்பிடியால் ஒன்றும் நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிற்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த அழகிரி கூறியதாவது, திமுக என்னை சரியான முறையில் பயன்படுத்த தவறிவிட்டது. இந்த தேர்தலில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட எந்த தொகுதியிலும் திமுக வெற்றி பெறாது. நான் இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic