Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 17, 2016

பதான்கோட் தாக்குதல் விவகாரம் - பாகிஸ்தான் செல்ல என்.ஐ.ஏ கோரிக்கை



பதான்கோட் விமானத்தளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த தங்களை பாகிஸ்தானிற்குள் அனுமதிக்க வேண்டுமென என்.ஐ.ஏ கோரிக்கை வைத்துள்ளது.

பதான்கோட் விமான தளத்தில் நடைபெற்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் பாகிஸ்தானில் செயல்படும்  ஜெய்ஷே-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் மற்றும் அவனுடைய சகோதரன் அப்துல் ரவூப், ஷாகித் லாத்தீப், காசிப் கான் ஆகியோரிடம் தாங்கள் விசாரணை நடத்த வேண்டுமென பாகிஸ்தான் அரசிடம் இந்தியாவின் என்.ஐ.ஏ கோரிக்கை வைத்துள்ளது.

இந்தியாவின் வெளிவுத்துறை அமைச்சகத்தின் மூலமாக இந்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசிற்கு அனுப்பிவைத்துள்ளதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற பின்பு பாகிஸ்தானின் புலனாய்வுத்துறையான ஜெ.ஐ.டி மற்றும் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் கடந்த மார்ச்ச் மாதம் இந்தியாவிற்கு வந்து தாகுதல் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்திச் செல்வதற்கு இந்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அப்பொது என்.ஐ.ஏ அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்ததாக கூறப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic