காங்கிரசு திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள ரொம்பவே மெனக்கெடுகிறது. ஆனால் இன்றைய சூழலில் திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு போய் என்ன செய்யப் போகிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு வேண்டும்.ஜெயலலிதாவை ஆதரித்து பேசுவதால்,ராகுல் ஜெயலலிதாவை தனிவிமானத்தில் பறந்து வந்து சந்தித்ததால் அதிமுக தங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும்,உள்ளாட்சி தேர்தலை சந்திக்கலாம் என்று நம்பினால் அவர்களை விட தார்ப்பாயில் வடிகட்டிய முட்டாள் யாரும் இருக்க முடியாது.
இன்றைக்கு மக்கள் நலக் கூட்டணியாக அரசியலில் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பெட்டிக்கடைகாரர்கள் அதிமுக கூட்டணியில் இருந்து பிடறியை பிடித்து விரட்டப்பட்டவர்கள். அரசியல் தரகர் வைகோ மூலம் திமுகவுக்கு எதிராக கடையை திறந்து வைத்து போனியாகமல் இருப்பவர்கள். அவர்களுடன் வேண்டுமானால் இணைந்து கொள்ளலாம். ஆனால் அங்கிருந்து துண்டைக் காணோம், துணியை காணோம் என்று ஓடியவர்கள்தான் முன்னாள் காங்கிரசு வாசன்கட்சி, நடிகர்விஜய்காந்த் கட்சிகள்.
நீங்கள் தப்பித்தவறி அதிமுகவுடன்கூட்டணி சேர்ந்தாலும் திமுகவிடம் வாதாடி பெற்றது போல் கவுரவமான இடங்களை பெறமுடியாது. திருவோட்டில் போட்டதை வாங்கிக்கொண்டு போகவேண்டும். அத்துடன் உங்கள் 'கை' சின்னத்துக்கு அங்கு வேலை இல்லை, எல்லாமே இரட்டை இலை. அவர்கள் சின்னத்தில்கருணாஸ் போன்று நின்று சட்டமன்றத்துக்கு ஒருவேளை தப்பித்தவறி போனாலுல் அம்மா பரணியை பாடுவதும், மேசையை தட்டுவதும் தான் உங்கள் மக்கள் தொண்டாக இருக்கும்.
அங்குபோய் ஜெயலலிதாவுக்கு ஒத்து நாதஸ்வரம் ஊதமுடியாது என்றெல்லாம் அடம்பிடிக்க முடியாது.
பாடச் சொன்னால் பாடனும், ஆடச் சொன்னால் ஆடணும், நாதஸ்வரம் ஊதச் சொன்னால் ஊதியே ஆகணும்.
இவை எல்லாம் நாங்கள் காங்கிரசுக்காரர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. தமிழ் நாட்டில் இருக்கும் சிறு குழந்தைக்கும் தெரிந்த விசயம்.
அதுவும் காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர் அனுபவம் ரொம்ப அதிகம். இவைகளை எல்லாம் தெரிந்தே திமுக எதிர்ப்பை எடுத்துக்கொண்டு அரசியல் செய்ய எண்ணும் காங்கிரசுக்கு ஒரு உண்மையும் தெரிந்திருக்கும் அது திமுகவுக்கு காங்கிரசு தேவையற்ற பழைய துணி மூட்டைதான்.
அதை எப்போது தூக்கி எறிவது என்ற நினைப்பில் தான் திமுக தொண்டன் ஒவ்வொருவரும் காத்திருக்கிறார்கள். கலைஞரின் தேவையற்ற பெருந்தன்மையால்தான் ஒட்டிக்கொண்டிருக்கிறது. கோபுரகலசத்தில்ஒட்டியிருக்கும் எச்சிலை தன்னால் தான் கோபுரம் ரொம்ப அழகாக இருக்கிற்து என்று எண்ணினால் அதற்கு அடுத்துவரும் காற்றே புத்தி புகட்டிவிடும்.
கோபுரம் திமுகழகம் என்ற உண்மையை காங்கிரசார் மறந்துவிடக்கூடாது. ராகுலை வைத்து வாக்குகளை குவிக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் துடைத்து எறியுங்கள். உங்கள் ராகுல் தமிழகத்துக்கு திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வந்தால் கிடைக்கிற வாக்குகளும் திமுகவுக்கு கிடைக்காமல்தான் போகும். இதுதான் வடமாநிலங்கள் காட்டிய உண்மை.
"ராகுலை கட்சியை விட்டு விலகிப் போகச் சொல்லுங்கள். அவர் இருந்தால் காங்கிரசு காணாமல் போய்விடும்"
இதை சொன்னது உத்திரபிரதேச காங்கிரசு தலைவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- சுகுமாரன்
No comments:
Write comments