Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 17, 2016

குஜராத்தில் வலுக்கும் தலித்களின் போராட்டம்


குஜராத்தில் உனா மாவட்டத்தில் கடந்த மாதம் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் பூதகரமாகிப்போனது. அன்று முதல் தினந்தோறும் தலித் மக்கள் வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இறந்த மாட்டினை அடக்கம் செய்யும் தொழிலை உனா மாவட்டதிலுள்ள தலித்கள் காலம்காலமாக செய்து வருகின்றனர். இச்சம்பவம் பிறகு தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை இறந்த மாட்டை அடக்கும் பணியில் தாங்கள் ஈடுபடப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் -15 சுதந்திர தினத்தன்று  மாபெரும்  போராட்டத்தை நடத்தினார்கள். இதில் ஐதரபாத் பல்கலைகழகத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆராய்ச்சி மாணவன் ரோஹித் வெமுலாவின் தாய், ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் பேரவையின் தலைவர் கன்ஹையா குமார் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தலித்களுக்கு ஆதரவான இந்த போராட்ட களத்தில் அங்குள்ள இஸ்லாமியர்களும் இணைந்துள்ளனர். இனி வரக்கூடிய தேர்தல்களில் இப்பிரச்சனை எதிரொலிக்கும் என்பதால் ஆளும் பா.ஜ.க அரசுக்கு தலித்களின் போராட்டம் பெரும் நெருக்கடியை கொடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.












No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic