இந்திய இராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் தசரா விழாக்களில் அதன் பிரதிபலிப்பு இருந்து வருகிறது.
உரி இராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் துல்லிய தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடத்தியது. துவக்கத்தில் இத்தாக்குதலை அனைத்து அரசியல் கட்சிகள் வரவேற்றினாலும், பின்னர் அநேகர் இது போலியான தாக்குதல் என்றும், மத்திய அரசு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொய் சொல்லி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் இத்தகைய குற்றச்சாட்டிற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்ததோடு இது இந்திய இராணுவ வீரர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் குற்றச்சாட்டு என கூறியது.
தற்போது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தசரா விழாக்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் எரியூட்டப்படும் கொடும்பாவி பொம்மைகளில் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷரீஃபின் புகைப்படத்தை ஒட்டி அதனை தீயிட்டு கொழுத்தும் நிகழ்சிகள் இடம்பெறுகின்றன.
பஞ்சாபில் நடைபெற்ற தசரா விழாவில் இத்தகைய நிகழ்வுகள் நடந்தது. இது தொடர்பாக அமைச்சர் அனில் ஜோஷி கூறும்போது "பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்களம் கொடுத்து வருகிறது. அவர்களுக்கு ஊக்கமளித்து அண்டை நாடுகளில் தீவிரவாத தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் அதிபரின் புகைப்படத்தை இந்த கொடும்பாவி பொம்மைகளில் ஒட்டியுள்ளோம். இந்த செய்தி பாகிஸ்தான் அதிபருக்கு போய் சேரும் என நம்புகிறோம். தீவிரவாதிகளுக்கு கொடுக்கும் ஆதரவான போக்கை அவர் நிறுத்திக்கொள்ளாவிட்டால் இந்த பொம்மைகளுக்கு ஏற்பட்ட கதி தான் அவருக்கும் ஏற்படும் என எச்சரிக்கிறோம்." இவ்வாறு கூறினார்.

No comments:
Write comments