Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 10, 2016

ராகுல் காந்தி இந்துவே அல்ல - சாக்ஷி மகாராஜ்

sakshi maharaj says rahul gandhi is not hindu

சர்ச்சைக்கு பெயர் போன பா.ஜ.க எம்.பிக்களில் ஒருவரான சாக்ஷி மகாராஜ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு இந்துவே அல்ல என்ற கருத்தை கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பா.ஜ.க மத்திய ஆட்சி அமைத்ததிலிருந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் சாக்ஷி மகராஜ். சமீபத்தில் மயினிபூரி சிறைச்சாலையில் பா.ஜ.க தலைவர் மைதான் சிங்கை சந்தித்துவிட்டு வெளியே வந்த அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது, "அரசியலில் ராகுல் காந்தி ஒரு பொடியன். நான் அவரை இந்துவாகவே கருதவில்லை. உத்திரபிரதேசத்தில் பேரணி நடத்தி ராகுல் காந்தி நேரத்தை வீணடித்து வருகிறார். அரசியலில் அவர் கற்க வேண்டிய பாடம் நிறையவே உள்ளது. அதற்கு இன்னும் அதிக காலம் எடுக்கும். பாகிஸ்தான் மீது பதில் தாக்குதல் நடத்திய இந்திய இராணுவத்தின் மீது ராகுலுக்கு சந்தேகம் இருக்கிறது. ராகுல் காந்தி இந்திய இராணுவத்தை நேசிப்பது இல்லை, காரணம் அவர் இந்து அல்ல. அவர் இந்துவாக இருந்திருந்தால் இந்நேரம் இராணுவம் நடத்திய தாக்குதலை சந்தேகித்திருக்கமாட்டார்.

அயோத்தியில் வெகுவிரைவிலேயே பிரம்மாண்டா இராமர் கோயில் கட்டப்படும். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது" இவ்வாறு சாக்ஷி மகாராஜ் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic