Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 9, 2016

அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறித்தாக்குதல்..!

sikh man was attacked in america
அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிலர் அவரைத் தாக்கி முகத்தில் காயம் ஏற்படுத்தினர். அவரது தலைப்பாகையை அவிழ்த்து வெறித்தனத்தைக் காட்டியுள்ளனர். இது அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள் இந்த சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்ட இந்தியரின் பெயர் மான் சிங் கல்சா. திருமணமானவர். ஒரு குழந்தையும் உள்ளது. ஐ.டி நிபுணராக கலிபோர்னியாவில் பணியாற்றி வருகிறார். செப்டம்பர் 25ஆம் தேதி இவர் தனது காரில் வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் இவரை வழிமறித்து பீர் பாட்டில்களைக் கொண்டு கார் கண்ணாடியைத் தாக்கி உடைத்தது. பின்னர் அவரையும் அக்கும்பல் தாக்கியது.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் மிகப் பெரிய சீக்கிய மனித உரிமை அமைப்பான சீக்கியர் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்சா அங்கிருந்து தப்பிப் போக முயன்றார். ஆனால் அக்கும்பல் பின் தொடர்ந்து வந்து தாக்கியுள்ளது. உடைந்த கண்ணாடி வழியாக உள்ளே தாக்கியுள்ளனர். அவரது டர்பனைப் பிடுங்கி கீழே வீசியுள்ளனற். அவரது முகத்திலும் சரமாரியாக குத்தியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

20 முதல் 30 வயது வரைக்குள்ளன 5 முதல் 6 பேர் கொண்ட கும்பல் இத்தாக்குதலை நடத்தியதாகவும் சீக்கியர் கூட்டணி கூறியுள்ளார். அந்தக் கும்பலில் 3 பேர் உடல் ரீதியாக தாக்கியவர்கள் என்றும் கூறப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic