Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 17, 2016

பெட்ரோல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் கோவா அரசு



தமிழகத்தில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 1.63 காசுகளும் உயர்ந்தன. இதனால பலதரப்பட்ட அரசியல் தலைவர்களிடத்திலிருந்தும் கடுமையான கண்டனம் வந்தவண்ணம் இருக்கின்றது.

அதே சமயம் பா.ஜ.க ஆளும் கோவா மாநிலத்தில் அந்த அரசு தாங்கள் வாக்களித்தபடி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் 60ற்கும் கட்டுப்படுத்தி வருகிறது. என்னதான் விலை ஏற்றம் நடந்தாலும் கோவாவில் பெட்ரோல் லிட்டருக்கு 60ரூபாய்க்கும் குறைவாகவே கிடைக்கும். கோவா அரசாங்கம் வாட் வரியை 22% விகிதத்திலிருந்து 20% குறைத்துள்ளது. இதனால் அங்கு பெட்ரோலின் விலை லிட்டருக்கு 59.70 ரூபாய்க்கு கிடைக்கிறது.

நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்த விலை உயர்வால் லிட்டருக்கு 60 ரூபாய் தாண்டியது என்பதால் உடனே இந்த வாட் வரிகுறைப்பை அமல்படுத்தியது கோவா அரசு. அம்மாநில முதலைமைச்சர் லஷ்மிகாந்த் பர்சேகர் சமீபத்தில் பட்ஜட் தாக்குதலின் போது வாட் வரியை அதிகரித்து பெட்ரோல் விலை ரூபாய் 60யை தாண்டும்பட்சத்டில் வரியை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்திருந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு பெட்ரோலுக்கான வாட் வரியை முற்றிலுமாக நீக்கியிருந்ததும், இதனால் அங்கு ரூபாய் 11க்கு ஒரு லிட்டர் இருந்துவந்தது. இதனால் வருடத்திற்கு அந்த அரசுக்கு ரூபாய் 150 கோடி நஷ்டம் ஏற்பட்டு வந்தது. பின்னர் வாட் வரியை கொண்டு வந்து பெட்ரோல் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது கோவா அரசு.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic