புதுடெல்லி மாநகராட்சி தேர்தலில் 13 வார்டுகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.
காலியாக இருந்த மாநகராட்சியில் 7 வார்டுகள், வடக்கு மாநகராட்சியில் 4, கிழக்கு மாநகராட்சியில் 2 வார்டுகளுக்காக நடைபெற்ற இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், பா.ஜ.க 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றார்.
கடந்த 2015 ஆம் சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத அளவிற்கு மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியிருந்த ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த தேர்தலில் ஆண்டாண்டு காலமாக டெல்லியை ஆட்சி செய்து வந்திருந்த காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவும் தோல்வியடைந்தன. அன்று முதல் புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதிக்கமே இருந்துவருகிறது.

No comments:
Write comments